பாக்கள் ஐந்து வகை, அவை:
1. செப்பலோசையை உடைய வெண்பா1. செப்பலோசை: வெண்பாவிற்கானது
செப்பல் என்றால் செப்புதல், உரைத்தல், விடை கூறுதல் எனப்படும். வினாவிற்கு விடை கொடுப்பது போன்ற ஓசை இருப்பதால் செப்பலோசை எனப்படுகிறது.
2. அகவலோசை: ஆசிரியப்பாவிற்கானது
அகவல் என்பது அழைத்தல் என்னும் பொருள் உடையது. ஒவ்வோர் அடியும் தனித்தனியே அழைக்கும் வகையில் அமைந்திருப்பதுதான் அகவல் என்பதற்கான காரணம்.
3. துள்ளலோசை: கலிப்பாவிற்கானது
அலைகள் தள்ளுவது போல சொற்கள் அமைந்திருப்பதால் துள்ளல் ஓசை வந்திருப்பதாக கூறுவர்.
4. தூங்கலோசை: வஞ்சிப்பாவிற்கானது
தூங்கல் என்றால் தொங்கல் என்ற பொருள். நெடுஞ்சீர்களால் அமைந்திருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்பர்.
மருட்பாவிற்கான ஓசை வெண்பாவிற்கும் ஆசிரியப்பாவிற்கும் சேர்ந்த ஓசையாகிறது.
மருள் என்றால் கலத்தல் என்று பொருள். வெண்பாவின் செப்பலோசையும் ஆசிரியப்பாவின் அகவற்பாவும் கலந்து வருவதால் மருட்பா எனப்படுகிறது.