நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும் நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 12
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 7. பூரண சக்தி > பாடல்: 1136
Parasakti, who with pervasive Para stood, Becomes Jnana Sakti and Ichcha Sakti; And when Kriya Sakti arrives, (from Bindu) The Dancer immanent becomes in them all.
`முத்திக்கு மூலமாய் உயிர்களிடத்தில் நிற்பாள்`` என மேற்கூறப்பட்ட அந்த அருட் சத்தியே முன்பு, உயிர்களை உய் விக்க விரும்பும் சிவனுடனே அந்த விருப்ப ஆற்றலாயும், பின், உயிர் களை உய்விக்கும் வழிகளை அறிகின்ற அறிவாற்றலாயும் நிற்பாள். (அப்பொழுதெல்லாம் சிவன் விரும்பியும், அறிந்து நிற்பதன்றிச் செயலில் ஈடுபடுதல் இல்லை.) பின்பு, அவள் நல்லவளாக அறியப் படுகின்ற கிரியா சத்தியாய் நின்ற பொழுதே, சிவன் அம் மூன்று சத்திக ளோடும் கூடிநின்று எல்லாச் செயலையும் செய்கின்றவனாவான்.