திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1166
They who reach Her, of Compassion Divine Well may they be here on earth below Yet regard them not as humans; Divine are their qualities; Serene is their composure Higher than Celestials are they.
எவ்விடத்தையும் தனதாக உடைய சத்தியைக் கூடி அவளுடன் எங்கும் வியாபகமாய் நின்ற அறிவர் சிவத்தன்மை பெற்றவர்; சீவத் தன்மையாகிய முனைப்பு நீங்கியவர். அதனால் பர வெளியில் நிற்பவராகிய அவரை மிக்க மேன்மை உடையவராக அறிந்து, மண்ணில், வாழ்பவராகிய மனிதரில் வைத்து எண்ணா தொழிதல் வேண்டும். (`விண்ணில் வாழும் கடவுளரில் வைத்து எண்ணல் வேண்டும்` என்றபடி).