இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும் பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி மது அக் குழலி மனோன்மணி மங்கை அதுஅக் கல்வியுள் ஆYயுழி யோகமே. 17
திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1171
This Sakti And that Our Lord Great When together united, It was Yoga and Bhoga divine; Manonmani Sakti of fragrant tresses In that union was verily in Yoga That in truth it is.
`போகத்தைத் தருவது` என மேற்கூறப்பட்ட இம் மறைப்புச் சத்தி சிவனுடன் உயிர்கட்கெல்லாம் பொதுவாயுள்ள போகக் கலப்பில் நின்று போகத்தைத் தந்து `அருட்சத்தி` என்னும் அந்தச் சத்தியாய் அச்சத்திக்கும் சிவத்திற்குமே சிறப்பாய் உள்ள அந்த அருட்கலவியுள் நின்றவழி உயிர்கட்கு யோகம் உளதாகும்.