திருமந்திரம் > நான்காம் தந்திரம் > 8. ஆதாரவாதேயம் > பாடல்: 1203
Ascend Adharas six in order, Where She resides, And daily approach Her, She of fragrant tresses, You shall in twinkle master the Vedas Four That within Her concealed stand.
சத்தி இந்நிலவுலகத்தில் தனக்கு இடமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள தலங்களில் அவள் எழுந்தருளியிருக் கின்ற வகைகளை விருப்பத்துடன் உணர்ந்து, நாள்தோறும் அவ்விடங் களை அடைந்து, அவளுக்குரிய மந்திரத்தோடு நீங்காது நிற்கின்ற `பிர ணவம், பீஜம், சக்தி, கீலகம்` என்னும் நான்கினையும் தெய்வத் தன்மை மிகும்படி ஓதி வழிபட்டால், பயன்கள் பலவற்றை அடையலாம்.