சரியாதி நான்குந் தருஞான நான்கும் விரிவான வேதாந்த சித்தாந்த மாறும் பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 7
திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 5. சரியை > பாடல்: 1449
The Four paths of worship And the four states of realization they give And the six schools of Vedanta-Siddhanta All these are truths That Nandi from the Golden City descending revealed For the doubting humanity to redeem.
`சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நான்கு நெறிகளும், அவற்றில் முடிவாக உள்ள தகுதி பெற்ற ஞானம் ஒன்றிலே `ஞானத்திற் சரியை` முதலிய நான்கும் விரிந்துள்ள இவையே வேதத்தின் தெளிவாய் அமைந்த சிவாகம நெறி. அரனையே பொருளாகின்ற நிலையைச் சிவபெருமான், அறியாமை யுடைய மக்கள் அதனினும் நீங்கித் தனது ஒளி யுலகத்தை யடைந்து தன்னை வணங்கி வாழ்தற் பொருட்டு` வைத்துள்ளான்.