ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற் றாங்கார மற்ற அனுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 7
திருமந்திரம் > ஐந்தாம் தந்திரம் > 19. நிராசாரம் > பாடல்: 1556
They wake not to Inner Light of Aum within; And joy not in ego-effaced bliss ensuing They wot not of approaching death, They seek not end of recurring birth, Lo! they pursued the unending path of contending faiths, And stood forlorn, for ever lost in faith false.
பிரணவத்தின் உள்ளே விளங்குவதாகிய ஒளியை அறிவினுள்ளே வெளிப்படுதலால் உண்டாகின்ற அனுபவத்தை அடையப் பெறார்; இறப்பு என்றாயினும் ஒருநாள் உளதாதலை நினையார்; அதனை நினைந்து, மேலும் பிறந்து இறத்தலை ஒழியும் நெறியைப் பற்றார்; வாளா சமயத்தை மட்டும் பற்றிக்கொண்டு அதன் பயனைப் பெறாதொழிகின்றார்கள் மக்கள்.