பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து பலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 2
திருமந்திரம் > ஆறாம் தந்திரம் > 4. துறவு > பாடல்: 1615
A myriad times are they born and dead, In a million folly they forget this; And in the darkness of Mala are close enveloped; When at last the hidden Grace of Siva bursts forth, And chases the Night away, Then is the moment for the soul to renounce; When it does then, a radiant Light it becomes.
ஆணவ மலம் பரிபாகம் எய்தாத பொழுது சத்தி நிபாதமும் வாராமையால் அம்மலம் பலமாயப் பொருள்களின்வழிப் பலவகை மயக்கத்தைச் செய்தலால் பிறந்தும், இறந்தும் உயிர்கள் தன்னை மறந்து நின்ற பொழுது அவற்றது அறிவினுள்ளே மறைந்து நின்றும், பின் அம் மலம் பரிபாகம் எய்தியபொழுது சத்திநிபாதம் வரு தலால் உயிர்கள் தன்னை நினைந்தவழி அச்சத்திநிபாத நிலை கட்கு ஏற்ப வெளி யிடத்தும், உள்ளே இதயத்தும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் தடத்தநிலைகளிலும், அறிவின்கண் சொரூப நிலை யிலும் முறையானே விளங்கிநிற்கின்ற சிவன் அச்சத்தி நிபாத நிலை கட்கு ஏற்பத்தோன்றும் துறவுணர்வின் அளவாக, முன்னர்ச் சிறிதாய்த் தோன்றிப் பின் பெரிதாய்ச் சுடர்விட்டு ஒளிர்கின்ற பேரொளி போல விளங்கிநிற்பன்.