திருமந்திரம் | Thirumanthiram

வேதா நெடுமால் உருத்திரன் மேலீசன்
மீதான ஐம்முகன் விந்துவும் நாதமும்
ஆதார சத்தியும் அந்தச் சிவனொடும்
சாதா ரணமாம் சதாசிவந் தானே. 2

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 4. சதாசிவ லிங்கம் (உலக முதற் சிவம்) > பாடல்: 1731

Brahma, Vishnu, Rudra, Mahesa,
And the Five-faced Lord above,
Bindu, Nada, Sakti Primal, and Siva
--All these are but Sadasiva in general.

சதாசிவந்தானே கீழ் நின்று ஒடுக்க முறையில் மேல் நோக்கி எண்ணப்படுகின்ற `அயன், மால், உருத்திரன், மகேசுரன்` என்னும் நால்வராயும், தனக்குமேல் முறையே நிற்கும் `விந்து, நாதம், சத்தி, சிவம்` என்னும் நால்வராயும் இருக்கும். அதனால் அனைத்து மூர்த்தங்கட்கும் இது பொது மூர்த்தமாகும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, May 22, 2026