அதிபதி செய்து அளகை வேந்தனை நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின் இதுபதி கொள்என்ற எம்பெரு மானே. 18
திருமந்திரம் > 2 பாயிரம் > பாடல்: 18
The Supreme Lord saw Alagai King's penance devout, Much pleased, He made the King Lord of all Riches; Even so, approach the Lord, noble deeds performing; For thus says the Lord, "Hold this lordship!"
அளகை நகரில் உள்ள இயக்கர்க்குத் தலைவனாகிய குபேரனை அவன் செய்த மிக்க தவத்தைக் கண்டு அவனை அந்நகருக்குத் தலைவனாகச் செய்து, அந்த அளகை நகரத்தைச் சுட்டி, `இதுதான் உனது நகர்; இதனை நீ நன்கு புரந்து, செல்வத்தைப் பெருக்குவதாயின் ஏற்றுக்கொள்` என்று எங்கள் சிவபிரானே வழங்கினான்.