திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 14. அடியார் பெருமை > பாடல்: 1874
Muse on the Lord; He resides in your heart; They who see Him residing within Know sorrows none; The heart that knows Him enter in, Loses its ego, Well may that be destroyed too; Do strive that state to reach.
புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மை யுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடைய மாட்டார்கள்.