துரியங்கள் மூன்று சொருகுஇட னாகி அரிய உரைத்தாரம் அங்கே அடக்கி மருவிய சாம்பவி கேசரி உண்மை பெருகிய ஞானம் பிறழ்முத் திரையே. 2
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 17. முத்திரை பேதம் > பாடல்: 1893
In the palatal place where the three Turiya states of awareness subsume, Insert your tongue inward, and there contain it; Thus practise the Mudras, Sambhavi and Kecari Divine Jnana's light to flood.
அரிய சொற்களையே உரைப்பதாயினும் அதனையும் துரிய நிலையில் நிற்குங்கால் எழாமல் அடங்கியிருக்கச் செய்து நின்ற `சாம்பவி, கேசரி` என்னும் இரண்டு முத்தரைகளே முத்துரியங்களும் செறிந்திருக்கும் இடமாய்` உலகியலினின்றும் நீங்குதற்கும், உண்மை ஞானம் பெருகுதற்கும் ஏதுவாய முத்திரைகளாம்.