அதுவித்தி லேநின்று அங்கு அண்ணிக்கும் நந்தி இதுவித்தி லேஉள வாற்றை உணரார் மதுவித்தி லேமலர் அன்னம தாகிப் பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே. 9
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 20. விந்துற்பனம் > பாடல்: 1931
Cosmos There in the Bindu, Nandi stands His Grace to bestow; That it is in their Bija within, they know not; That Seed as scented flower in the (body) into microcosm blossoms As a Divine Swan So-ham in the macrocosm it is; He the Blessed One that is the Causal Seed of all.
`அது` எனச் சேய்மையாதாகச் சுட்டிச் சொல்லப் படுகின்ற மகாமாயையாகிய அந்த விந்துவிலே நின்று, அதனை அடைந்தவர்க்கு இனிப்பவனாகிய சிவன், `இது` என அண்மையாகச் சுட்டிச் சொல்லப்படுகின்ற சுக்கிலமாகிய இந்த விந்துவிலும் நின்று உயிர்களைப் பிறப்பித்துப் பின் வீடடையச் செய்தலை உணரும் உணர்வுடையார் உலகத்து அரியர், ஆயினும், மகாமாயையையே தனக்கு உடமாகக் கொண்டு விளங்குகின்ற அந்தப்பெருமான், நீரால் உண்டாக்கின்ற உணவுப்பொருளில் தங்கிப் பின் கருவுற்பத்திக்கு யாவரிடத்தும் பொதுவாய் உள்ள காரணமாகின்ற விந்துவிலும் இருக்கும் புண்ணியன் ஆகின்றான்.