திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 22. ஆதித்த நிலை - அண்டாதித்தன் > பாடல்: 1983
Breaking through the Earth (Muladhara) He penetrates beyond into the Adharas that Are Sky (Visuddhi) and Space (Ajna) within; He is the very source of joy that dazzles the eye; He indeed responds to contemplation sweet.
ஆதித்தன் நிலத்தைப் பிளந்து கொண்டு அதன் கீழேயும் ஓடுகின்றான். பின்பு மேலே வந்து ஆகாயத்தைப் பிளந்துகொண்டு எங்கும் ஒளிமயமாகவும் செய்கின்றான். மற்றும் உயிர்களின் கண்களைத் துளைத்து அவற்றுள்ளேயும் புகுந்து இருளை ஓட்டி மகிழ்ச்சியைத் தருகின்றான். அந்த இன்பத்தை நினைத்தல் கடமையாகலின் அக்கடமையில் வழுவாது நின்று அவனைத் தியானித்தற்கும் அவன் உடன்பட்டு நிற்கின்றான்.