எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும் எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்ப விரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி ஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே. 1
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 24. மன ஆதித்தன் > பாடல்: 1988
The luminous Sun dewy cool becomes When Moon spreads its contending rays; In the luminosity that commingling emanates, My yearning Prana as a ray beams, That verily is my life's Full Moon.
பூர்ணிமை நாளில் மிக விளங்குகின்ற சந்திரன், தெறும் இயல்பினையுடைய கதிர்களையுடைய சூரியனுக்கு எதிரே நின்று தன் கதிர்களை வீசும் இயல்பு அமைந்திருக்குமாயின், அந்தச் சூரியனும் குளிர்ந்த கதிர்களை வீசுவோன் ஆகிவிடுவான். (அந்த அமைப்புத்தான் இல்லையே!) பிண்டாதித்தனுக்குள்ளே விளங்கு கின்ற எனது மனம் அவனால் ஓர் ஆதித்தனாயின், அது பின்பு பிண்டத் துள்ளே விளங்கும் சந்திர மண்டல்தினது அமுத தாரையால் பூர்ணிமை நாளில் தோன்றுகின்ற சந்திரனாகிவிடும்.