ஆக மதத்தன ஐந்து களிறுள ஆக மதத்தறி யோடுஅணை கின்றில பாகனும் எய்த்துஅவை தாமும் இளைத்தபின் யோகு திருந்துதல் ஒன்றிஅறி யோமே. 1
திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 32. ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை > பாடல்: 2023
Five are the elephants (Senses) That are in MAST Their MAST increasing They do not to the (Divine) Post remain tied; As the mahout (Jiva) tires, And the elephants (Senses) too, get their energy exhausted, Then they turn to Yoga; Why this way (they delayed) we know not!
இம்மந்திரம் ஒட்டணி. ஐந்து களிறுகள். ஐம்புலன் களின் மேல் செல்லும் ஐந்து அவாக்களையுடைய மனம் - மனம் ஒன்றாயினும் அவா வகையால் ஐந்தாயிற்று. ஆக மதத்தமை. மிகவும் மதம் கொண்டமை. அஃதாவது அவா மிக மிகுத்தமை. தறி - திருவருள். பாகன் - உயிர். அவன் எய்த்தமை - அந்த மனத்தை அவாக் கொள்ளாதவாறு தன் முயற்சியாலே தான் அடக்கி அடக்கிப் பார்த்து இயலாது இளைத்தமை. இனிக் களிறுகள் இளைத்தமை - மனம்தான் அவாவிய புலன்களை அடைந்து அடைந்து நிறைவுபெற விரும்பி, நிறைவு கூடாமையால் வெறுப்புற்றமை. இந்நிலையிலே அந்த மனம் திருந்தி நிறைவு பெறுதற்கு வழி சிவயோகத்தைத் தவிர வேறொன்றில்லாமை அறியப்பட்டது.