திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 4. மத்திய சாக்கிர அவத்தை > பாடல்: 2171
One there is, Who placed Tattvas five and twenty, With them in my body I abide; Mad is He, Great is He, Birthless is He --Thus in endearment I sought Him; And by the Grace He granted, Redeemed am I.
உயிர்களுக்கு உதவியாக அவைகளின் வசமாக வைக்கப்பட்ட கருவிகள் இருபத்தஞ்சு. எனினும், (அவைகளை வைத்துமட்டும் போதாமையால்) எல்லாவற்றையும் நடத்தும் தலைமைப்பாட்டோடு உடனாய், நீங்காது ஒருவன் இருக்கின்றான். அவனை எல்லா நூல்களும் ஒருமுகமாக, `பித்தன்` என்றும் `பெரியோன்` என்றும் `பிறப்பிலி` என்றும் கூறுதலையறிந்து. அவனையே விரும்பி நான் உய்ந்தவாறு குறிக்கொளத்தக்கதாகும்.