நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே. 8
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 4. மத்திய சாக்கிர அவத்தை > பாடல்: 2174
The ten Nadis (pulsating nerves invisible) And the ten Vayus (winds) Will in ascending breath subside; Rapturous your state shall be; Agreeable your taste shall be; Perfect your mind shall be; In the your goodly body.
நாடிகள் பத்தும், நன்மை விளங்குகின்ற வாயுக்கள் பத்தும் நாடிகளில் சிறப்புடைய, `இடை, பிங்கலை, என்னும் இரு நாடிகள் வழியாக இயங்குகின்ற `பிராணன்` என்னும் வாயுவிற்குக் கீழ்ப்பட்டு, அவற்றின்வழி நிற்கும். ஆணும், பெண்ணும் கூடியதனால் விளைகின்ற இன்பத்தில் உயிர் மூழ்குதற்குக் காரணமான சுக்கில சோணிதங்களும், அவ்வின்பத்தை விரும்புவதாய் அன்பைச் செய்கின்ற மனமும் உடல் முழுவதுமாய் இருக்கும்.