ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன்இனி தாமே. 3
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 8. பராவத்தை > பாடல்: 2271
They who know Him Beyond the Tattvas six times six Truly know Him; Beyond the Tattvas six times six They receive His Grace; They who have Knowledge True Beyond the Tattvas six times six Only to them, is He the Divine Bliss; He the Hara That is beyond the Tattvas, Six times six.
முப்பத்தாறு தத்துவங்களும் சடமேயாதலின் சித்தாகிய பரம்பொருள் அத்தத்துவங்கள் அனைத்திற்கும் அப்பாற் பட்டதாம். (அந்தப் பரம் பொருளை யடைதலே பராவத்தை) இந்தச் சடசித்துக்களைப் பகுத்து, சித்தின் இயல்பை அறிபவரும் அரியர். அந்தச் சித்துப் பொருளின் குணமே அருள் ஆதலின், அப்பொருளை அறிந்து அருளைப் பெறுபவரும் அரியர். உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது. ஆகலின், அறிவே வடிவான பரம் பொருளைச் சார்ந்து அறிவே வடிவாய்விட்ட அவர்கட்குத்தான் சிவன் அளவிலா இன்பப் பொருளாய் இன்புறுத்துவான்.