ஆயும்பொய்ம் மாயை அகம்புற மாய்நிற்கும் வாயு மனமும் கடந்துஅம் மயக்கறின் தூய அறிவு சிவானந்த மாகிப்போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே. 7
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 8. பராவத்தை > பாடல்: 2275
The Maya we seek to understand Envelops Soul, inside and out; The hypnosis it creates baffles thought and word; When you are freed from it, Your knowledge becomes purified; It is transmuted into Sivananda And becomes a protective roof over you.
பல சமயத்தாராலும், `எத்தன்மைத்து` என ஆராயப் படுவதாய், அருவமாய் நிற்கும்மாயை, சிவத்திற்கு வேறும் ஆகாமல், ஒன்றும் ஆகாமல் இடைப்பட்டதாய் இருக்கும். அதனால், வாக்கு மனங்கள் நீங்கிய பின்பும் வாசனை யளவாய் நிற்கின்ற அந்த மாயை அறவே நீங்கினால், அறிவு முழுத் தூய்மை அடைந்து, அதனால் சிவானந்த மயமாகிப் பின்பு அந்தச் சிவானந்தத்தால் விழுங்கப்பட்ட பொருளாகிவிடும்.