துரியப் பரியில் இருந்தஅச் சீவனைப் பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட் டன்றே. 8
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 8. பராவத்தை > பாடல்: 2276
The Jiva was in Turiya State; Unto a swift steed Was into the Turiyatita Jagra State led; The Master Thus had the (Karmic) jackals chased away; And the Karmas stood howling, Disappointed sore.
பர துரியமாகிய குதிரைமேல் ஏறிய ஆன்மா, அதனை விடுத்து, அதற்குமேல் உள்ள அதீதமாகிய புலிக்குள் தன்னைப் புகவிடுமாயின், புலியால் கௌவிக் கொள்ளப்பட்ட ஆட்டினை நரிகள் பற்ற மாட்டாது அஞ்சி ஒடிவிடுதல் போல, அந்த ஆன்மாவை மாயாகாரியங்களாகிய தத்துவங்கள் அணுகமாட்டாது நீங்கிவிடும். (அஃதாவது, `செயல் இழந்துவிடும்` என்பதாம்) மாயா கருவிகள் நீங்கினமையால் பிராரத்த கன்மம் வந்து பற்றமாட்டாது ஒழியும்.