உடந்தசெந் தாமரை உள்ளுறு சோதி நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்தஅவ் விடம்தரு வாசலை மேல்திற வீரே. 7
திருமந்திரம் > எட்டாம் தந்திரம் > 24. முச்சொரூபம் > பாடல்: 2484
He is the Light within the heart's crimson lotus; If the Crimson Lotus within, Nada you reached, You shall wake Kundalini Sakti; And closing Muladhara where She imprisoned is, Ascend upward (through Sushumna in Yogic breathing) And open wide the gate above at cranium top.
வரிசையாய் அமைந்துள்ள செந்தாமரை மலர்களின் பல்வேறு வகையாய்க் காட்சியளிக்கின்ற இறைவனை மூலாதாரத்தி னின்றும் எழுந்து மேல்நோக்கி நடக்கின்ற அனல் நாதாந்தத்திலே நிறுத்திக்காட்ட, அதனால், அவ்விடத்தை அடைந்த பால் ஒழுகும் தனங்களையுடைய பெருமாட்டி அடைத்து வைத்திருக்கின்ற விசாலமான மேல் வாசலைத் திறக்கும் உபாயம் அறிந்து திறவுங்கள்.