திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai

அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்!
மண்டமர் கடந்தநின் வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்!
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்!
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி!
போர்மிகு பொருந! குரிசில்!’ எனப்பல
யானறி அளவையின் ஏத்தி ஆனாது,
‘நின்னளந் தறிதல் மன்னுயிர்க் கருமையின்
நின்னடி உள்ளி வந்தனென்; நின்னொடு
புரையுநர் இல்லாப் புலமை யோய்!’எனக் . . . .280

திருமுருகாற்றுப்படை > 6. பழமுதிர் சோலை > . .முருகாற்றுப்படுத்தல்: > பாடல்: 28

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026