பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவுந் தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல் மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங் கூவி அவிழுங் குறிக்கொண்ட போதே
திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 14 கரு உற்பத்தி > பாடல்: 456
As unto when flower blossoms, the breeze spreads fragrance, In spaces all around So does Prana over Jiva extend, Gently unfolding at the time destined.
பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.