கொண்டநல் வாயு இருவர்க்கும் ..ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாங் கோள்வளை யாட்கே
திருமந்திரம் > இரண்டாந் தந்திரம் > 14 கரு உற்பத்தி > பாடல்: 483
If in Male and Female breath runs In measure equable, The infant born will exceeding handsome be; When in both breath rhythm falters, No Conception will there be.
கலவிக் காலத்தில் மூச்சுக் காற்று இருவர்க்கும் வலம், இடம் என்னும் வகையில் ஒருவகையிலே, ஓரளவிலே இயங்குமாயின், தங்கிய கருச் சிதையாது மேற்கூறியவாறு குழவி ஆணும், பெண்ணுமாய் நிலைபெறுதலோடு, அழகாயும் இருக்கும். அவ்வாறின்றி அவர்க்கு மாறி மாறி இயங்கின், தங்கிய கரு பின் நிலைபெறாது அழியும்.