தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | ||
| 1 | எழுதி, சரி பார்த்து, கற்று, கண்டு, அதன் படி நிற்றல் எழுதரிது முன்னம் எழுதிய பின்னத்தைப் பழுதற வாசிப்பரிது பண்பா- முழுதுமதைக் கற்பரிது நற்பயனைக் காண்பரிது கண்டக்கால் நிற்பரிது தானந் நிலை. தனிப்பாடல் திரட்டு > கற்றல் > பாடல்: 1 | |
| 2 | பல பசுக்கள் கொண்ட ஒரு தொழுவினில் ஒரு கன்றானது எப்படி தன் தாயைக் கண்டு அணுகுமோ, அதுபோல நம் வினை! பாரில்இன்ப துன்பம் படரவிதித் தானே வாரிசத்தான்! யாது கவி வல்லவா? - ஓர்தொழுவில் பல்ஆவுள் கன்றுதன்தாய் பார்த்து அணுகல் போல்புவியில் எல்லாரும் செய்வினை யாலே. சதாவதானம் சரவணப்பெருமாட் கவிராயர் தனிப்பாடல் திரட்டு > வினை > பாடல்: 2 | |
| 3 | நீதி தவறாத ஓர் மன்னன் ஊரில் உள்ள பெண்களின் நகை(ப்பு) எத்தகையது தூது மதுரை துவரை கடையிடைமுன் ஓதுகின்ற மூஎழுத்து ஒக்குமே- நீதி செகராச சேகரன்வாழ் சிங்கையெனுஞ் செல்வ நகர்ஆ யிழையார் நகை. தனிப்பாடல் திரட்டு > நகை > பாடல்: 3 | பாடல் எண் |