சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 0 | காப்பு மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர் முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும் மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங் கடம்பொழி முக்கட் களிறு. சோமேசர் முதுமொழி வெண்பா > காப்பு > பாடல்: 0 | |
| 1 | 1. கடவுள் வாழ்த்து சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற் சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில் அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகு சோமேசர் முதுமொழி வெண்பா > கடவுள் வாழ்த்து > பாடல்: 1 | |
| 2 | 2. வான்சிறப்பு நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன் துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். சோமேசர் முதுமொழி வெண்பா > வான்சிறப்பு > பாடல்: 2 | |
| 3 | 3. நீத்தார் பெருமை அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச் சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். சோமேசர் முதுமொழி வெண்பா > நீத்தார் பெருமை > பாடல்: 3 | |
| 4 | 4. அறன்வலியுறுத்தல் தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந் தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். சோமேசர் முதுமொழி வெண்பா > அறன்வலியுறுத்தல் > பாடல்: 4 | |
| 5 | 5. இல்வாழ்க்கை இல்வாழ் தரும னியற்சந் திரசேனன் தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. சோமேசர் முதுமொழி வெண்பா > இல்வாழ்க்கை > பாடல்: 5 | |
| 6 | 6. வாழ்கைத்துணை நலம் மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள் தூய அனுசுயை சோமேசா - மேவுபிற தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. சோமேசர் முதுமொழி வெண்பா > வாழ்கைத்துணை நலம் > பாடல்: 6 |
| பாடல் எண் | பாடல் | Verse |
|---|---|---|
| 7 | 7. புதல்வரைபெறுதல் பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ் சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில் தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. சோமேசர் முதுமொழி வெண்பா > புதல்வரைபெறுதல் > பாடல்: 7 | |
| 8 | 8. அன்புடைமை தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர் புன்கணீர் பூசல் தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > அன்புடைமை > பாடல்: 8 | |
| 9 | ||
| 0 |