சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa | full |
| 0 | காப்பு
மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர் முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும் மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங் கடம்பொழி முக்கட் களிறு. சோமேசர் முதுமொழி வெண்பா > காப்பு > பாடல்: 0
| |
| 1 | 1. கடவுள் வாழ்த்து
சீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற் சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில் அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகு சோமேசர் முதுமொழி வெண்பா > கடவுள் வாழ்த்து > பாடல்: 1
| |
| 2 | 2. வான்சிறப்பு
நேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன் துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின். சோமேசர் முதுமொழி வெண்பா > வான்சிறப்பு > பாடல்: 2
| |
| 3 | 3. நீத்தார் பெருமை
அத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச் சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம் நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். சோமேசர் முதுமொழி வெண்பா > நீத்தார் பெருமை > பாடல்: 3
| |
| 4 | 4. அறன்வலியுறுத்தல்
தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந் தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்க அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம். சோமேசர் முதுமொழி வெண்பா > அறன்வலியுறுத்தல் > பாடல்: 4
| |
| 5 | 5. இல்வாழ்க்கை
இல்வாழ் தரும னியற்சந் திரசேனன் தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்ல இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாரு ளெல்லாந் தலை. சோமேசர் முதுமொழி வெண்பா > இல்வாழ்க்கை > பாடல்: 5
| |
| 6 | அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa | full 6. வாழ்கைத்துணை நலம்
மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள் தூய அனுசுயை சோமேசா - மேவுபிற தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. சோமேசர் முதுமொழி வெண்பா > வாழ்கைத்துணை நலம் > பாடல்: 6
| |
| 7 | 7. புதல்வரைபெறுதல்
பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ் சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில் தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது. சோமேசர் முதுமொழி வெண்பா > புதல்வரைபெறுதல் > பாடல்: 7
| |
| 8 | 8. அன்புடைமை
தோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்து தோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்ற அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர் புன்கணீர் பூசல் தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > அன்புடைமை > பாடல்: 8
| |
| 9 | 9. விருந்தோம்பல்
பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற் சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில் வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுத லின்று. சோமேசர் முதுமொழி வெண்பா > விருந்தோம்பல் > பாடல்: 9
| |
| 10 | 10. இனிவை கூறல்
இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய் துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடைய இன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோ வன்சொல் வழங்கு வது. சோமேசர் முதுமொழி வெண்பா > இனிவை கூறல் > பாடல்: 10
| |
| 11 | 11. செய்நன்றி அறிதல்
பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல் சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத் தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த் கொள்வர் பயன்தெரி வார். சோமேசர் முதுமொழி வெண்பா > செய்நன்றி அறிதல் > பாடல்: 11
| |
| 12 | 12. நடுவு நிலைமை
வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச் சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற் சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. சோமேசர் முதுமொழி வெண்பா > நடுவு நிலைமை > பாடல்: 12
| |
| 13 | 13. அடக்கமுடைமை
எல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச் சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால் யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால் சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. சோமேசர் முதுமொழி வெண்பா > அடக்கமுடைமை > பாடல்: 13
| |
| 14 | 14. ஓழுக்கமுடைமை
தீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன் துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின் ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். சோமேசர் முதுமொழி வெண்பா > ஓழுக்கமுடைமை > பாடல்: 14
| |
| 15 | 15. பிறனில் விழையாமை
ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான் தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்ற பகைபாவ மச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். சோமேசர் முதுமொழி வெண்பா > பிறனில் விழையாமை > பாடல்: 15
| |
| 16 | 16. பொறையுடைமை
ஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார் சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்ட ஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்கு பொன்றுந் துணையும் புகழ். சோமேசர் முதுமொழி வெண்பா > பொறையுடைமை > பாடல்: 16
| |
| 17 | 17. அழுக்காறாமை
அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற் துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம் அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார் வழுக்கியுங் கேடீன் பது. சோமேசர் முதுமொழி வெண்பா > அழுக்காறாமை > பாடல்: 17
| |
| 18 | 18. வெஃகாமை
நின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறை துன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில் நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக் குற்றமு மாங்கே தரும். சோமேசர் முதுமொழி வெண்பா > வெஃகாமை > பாடல்: 18
| |
| 19 | 19. புறங்கூறாமை
கூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தோறா தவர். சோமேசர் முதுமொழி வெண்பா > புறங்கூறாமை > பாடல்: 19
| |
| 20 | 20. பயனில சொல்லாமை
சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவே துக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற் பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட் பதடி யெனல். சோமேசர் முதுமொழி வெண்பா > பயனில சொல்லாமை > பாடல்: 20
| |
| 21 | 21. தீவினையச்சம்
குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல் சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான் மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. சோமேசர் முதுமொழி வெண்பா > தீவினையச்சம் > பாடல்: 21
| |
| 22 | 22. ஒப்புரவறிதல்
பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந் தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம் நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மை செய்யா தமைகலா வாறு. சோமேசர் முதுமொழி வெண்பா > ஒப்புரவறிதல் > பாடல்: 22
| |
| 23 | 23. ஈகை
மீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன் தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில் இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணு மளவு. சோமேசர் முதுமொழி வெண்பா > ஈகை > பாடல்: 23
| |
| 24 | 24. புகழ்
போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத் தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன் ஈத லிசைபட வாழ்த லதுவல்லது ஊதிய மில்லை யுயிர்க்கு. சோமேசர் முதுமொழி வெண்பா > புகழ் > பாடல்: 24
| |
| பாடல் எண் | பாடல் | Verse |
| 25 | 25. அருளுடைமை
மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன் சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்த பொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார் அற்றார்மற் றாத லரிது. சோமேசர் முதுமொழி வெண்பா > அருளுடைமை > பாடல்: 25
| |
| 0 |
| 26 |