இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர் புயலுறும் புல்லின் புணர்ந்தவ ரேயினும் மயலுறும் வானவர் சாரஇரும் என்பார் அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 3
திருமந்திரம் > முதல் தந்திரம் > 9 மகளிர் இழிவு > பாடல்: 206
Decoyed into passion's snare by tender woman's grace, They fell into her arms and swooned in the warm embrace; This is life's crowning glory, fit for the gods to share-- Thus speaking, they parted leaving not a trace.
ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம்கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில் லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.