திருமுருகாற்றுப்படை | Thirumurgatrupadai

கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் 
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்டு 
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய 
முடியடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ 
அகலா மீனின் அவிர்வன இமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழில் முடிமார்
மனனேர்பு எழுதரு வாள்நிற முகனே . . . .90

திருமுருகாற்றுப்படை > 2. திருச்சீர் அலைவாய் > பாடல்: 9

PREV  |  NEXT

Click above Prev / Next or use your keyboard Left / Right arrows

  தேடுக


Tue, Jul 28, 2026