திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பெருமைக்கும் நுண்மைக்கும் பேர் அருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பு இன்மையான். | பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றி னருமைக்கு மொப்பின்மை யான். |
| பொருள் : எல்லாவற்றிலும் பெரிய பொருளாய் நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாவுயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனை ஒப்பார் யாருளர்? பிறர் தன்னைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலைமையிலும் அவன் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows