திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும் துறந்தோர் இறப்போர் தொகை. | பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலுந் துறந்தோ ரிறப்போர் தொகை. |
| பொருள் : இதுவரையில் பற்று நீங்கி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிச் சொல்லுதல் முடியாது. இது, உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரையில் வந்துபோன நாட்களை எண்ணிச் சொல்வது போல முடியாத செயல். அவ்வாறே, இனிமேல் பற்று நீங்கி முத்தி பெற இருப்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்லுதல் முடியாது. இதுவும், உலகம் முடியும் வரை இனி மேல் வர இருக்கின்ற நாட்களை எண்ணி அறிய முயல்வது போல முடியாத செயலேயாகும். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows