திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| திரி மலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி ஒரு மலத்தார் ஆயும் உளர். | திரிமலத்தாரொன்றதனிற் சென்றார்க ளன்றி யொருமலத்தா ராயு முளர். |
| பொருள் : எல்லாவுயிர்களும் மூவகையுள் அடங்கி நிற்பர். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் உடையவர் எனவும், அவற்றுள் மாயை நீங்கிய இரு மலம் உடையவர் எனவும், மாயையோடு கன்மமும் இன்றி ஒரு மலமே உடையவர் எனவும் இங்ஙனம் மூவகையினராவர். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows