திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை உய்த்தல் சதசத்தாம் உயிர். | சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை யுய்த்தல்சத சத்தா முயிர். |
| பொருள் : சத்தாகிய முதற்பொருள் அசத்தாகிய உலகத்தை அறிந்து அனுபவியாது. அசத்தாகிய உலகம் அறிவற்ற சடம் ஆதலின் அது சத்தாகிய முதற்பொருளை அறியாது. இந்நிலைமையில் இவ்விரண்டினிடத்தும் தனது அறிவைச் செலுத்தி அனுபவிப்பது உயிரேயாகும். அவ்வுயிர் சத்தும் ஆகாமல் அசத்தும் ஆகாமல் சதசத்தாய் நிற்கும் இயல்பினது. | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows