திருவருட்பயன் | Thiruvarutpayan |
| பதம் பிரித்து | உள்ளபடியே |
|---|---|
| பல் ஆர் உயிர் உணரும் பான்மை என மேல் ஒருவன் இல்லாதான் எங்கள் இறை. | பல்லா ருயிருணரும் பான்மையென மேலொருவ னில்லாதா னெங்க ளிறை. |
| பொருள் : உயிர்கள் எண்ணற்றவை; அறியும் தன்மை உடையவை. ஆனால், அவை தாமே அறியமாட்டா; வேறொரு துணை அறிவிக்கவே அறிவன. அவ்வுயிர்களைப் போன்றவனல்லன் எம் இறைவன். அவன்தானே எல்லாவற்றையும் அறிபவன். தன்னை அறிவித்தற்குத் தனக்கு மேலாக ஒருவனை உடையவன் அல்லன். | |
Click above Prev / Next or use your keyboard Left / Right arrows